தப்புகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வேந்திரன். இவர் குடும்பத்துடன் திருப்பூரில் வசித்து வரும் நிலையில் வீரபாண்டி திருவிழாவிற்காக குடும்பத்துடன் தப்புகுண்டு பகுதிக்கு வந்துள்ளார். நேற்று (மே.20) செல்வேந்திரனின் 5 வயது மகன் அவரது தாத்தாவுடன் கடைக்கு சென்றபோது அவ்வழியாக முருகபாண்டி என்பவர் ஒட்டி வந்த லோடு வேன் சிறுவன் மீது மோதியது. இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் விசாரணை.