கோவையில் அரசு ஊழியர் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு – போலீஸ் விசாரணை தொடக்கம்!
ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய அரசுத்துறை அதிகாரி அடுக்குமாடி குடியிருப்பில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை.;
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் உதவி அலுவலராக பணியாற்றிய கருப்புசாமி, கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று இரவு, அந்த குடியிருப்பின் 5வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். தகவல் கிடைத்ததும், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில் அவர் மதுபோதையில் இருந்ததாகவும், குடும்பத்திலும் சண்டைகள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மது போதையில் விழுந்தாரா? அல்லது வேறு காரணமா? என்பதைக் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.