நகை பறித்த வழக்கில் 5 பேர் கைது

வேடசந்தூரில் நகை பறித்த வழக்கில் 5 பேர் கைது;

Update: 2025-08-16 09:21 GMT
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கடந்த 10ஆம் தேதி அரிவாளை வைத்து மிரட்டி, வீட்டில் தனியாக பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். நாகம்பட்டி பகுதியில் ஆண்டியப்பன் என்பவரின் தோட்டத்து வீட்டில் முகமூடியு அணிந்து புகுந்த கும்பல், தனியாக இருந்த அவரது மனைவி பாண்டியம்மாளிடம் 3 சவரன் தங்க சங்கிலி, கம்மலை பறித்துக் கொண்டு, அவரை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு தப்பினர். தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மதுமோகன், ஜெமினி, வினோத்குமார், தங்கப்பாண்டி மற்றும் ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர்.

Similar News