பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ செப்.5-ல் ரிலீஸ்
பாலா நாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
பாலா நாயகனாக அறிமுகமாகும் படம் ‘காந்தி கண்ணாடி’. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிக்கப்பட்டது. தற்போது அனைத்து பணிகளும் முடித்து செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அன்றைய தினத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப் போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானார். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதைத் தாண்டி இவருடைய உதவும் குணத்துக்கு இணையத்தில் பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது. பாலா நாயகனாக அறிமுகமாகும் ‘காந்தி கண்ணாடி’ படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜெய்கிரண் தயாரித்துள்ளார். ‘ரணம்’ படத்தினை இயக்கிய ஷெரீப் இயக்கியுள்ளார். இதில் இயக்குநர் பாலாஜி சக்திவேல், அர்ச்சனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இசையமைப்பாளர்களாக பணிபுரிந்துள்ளனர்.