கந்திலி பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி50 பேர் திமுகவில் இருந்தனர்
கந்திலி பகுதியில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் MLA முன்பு 50 க்கும் மேற்பட்ட வர்கள்மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி பகுதியில் பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் MLA முன்பு 50 க்கும் மேற்பட்ட வர்கள்மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர் திருப்பத்தூர் மாவட்டம், கந்தலி தெற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் கெஜல்நாயக்கன்பட்டி வள்ளி மஹாலில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான தேவராஜி MLA சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தி, புதிய உறுப்பினர்கள் அட்டை மற்றும் தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர், தென்திசையின் தீர்ப்பு 40/40 நூல்களை வழங்கினார். அதனைதொடர்ந்து அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என மாற்று கட்சியிலிருந்து விலகி சுமார் 50 பேர் கழகத்தில் இணைந்தவர்களுக்கு கருப்பு சிவப்பு துண்டு அணிவித்து வரவேற்றார். கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் டி.அசோக்குமார் அவர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, கூட்டத்திற்கு தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் டி.கே.மோகன், ஆ.சம்பத்குமார், மாவட்ட பொருளாளர் கே.பி.ஆர்.ஜோதிராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.ராஜமாணிக்கம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன், கந்திலி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு. மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மு.க.அருள்நிதி மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.