சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டைக்கு வந்த 50 டன் பட்டாசு கழிவு குப்பைகள்
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள ரீ சஸ்டை னபிலிட்டி ஐடபிள்யுஎம் சொல்யூஷன் லிமிடெட் அபாயகரமான கழிவு அகற்றும் ஆலையை 50 டன் அளவிற்கு பட்டாசு கழிவு குப்பைகள்
சென்னையில் இருந்து பட்டாசு கழிவு குப்பைகளை ஏற்றி வந்த பெருநகர சென்னை மாநகராட்சி லாரிகள் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள ரீ சஸ்டை னபிலிட்டி ஐடபிள்யுஎம் சொல்யூஷன் லிமிடெட் அபாயகரமான கழிவு அகற்றும் ஆலையை 50 டன் அளவிற்கு பட்டாசு கழிவு குப்பைகள் தற்போது வந்தடைந்துள்ளது சென்னையில் தீபாவளி தினத்தன்று வெடிக்கப்பட்ட பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்கு மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் பட்டாசு கழிவுகளை அகற்றுவதற்காக, சுமார் 19600 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். ஆக மொத்தம் கழிவுகளை அகற்றுவதற்காக 23,000 தூய்மை பணியாளர்கள் அதாவது தனியார் மற்றும் சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நேற்று இரவில் இருந்து தற்போது வரை சராசரியாக 100 டன் அளவிற்கு கழிவுகள் சேகரிப்பட்டு வரப்படுகிறது இந்த நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் தலா இரண்டு லாரிகள் மூலம் பட்டாசு கழிவுகளை சேகரிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பட்டாசு கழிவுகளை கொண்டு செல்வதற்கு ஏதுவாக மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என மொத்தமாக 30 வாகனங்கள் அமைக்கப்பட்டு கழிவுகளை அகற்றி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பேட்டையில் உள்ள ரீ சஸ்டை னபிலிட்டி ஐடபிள்யுஎம் சொல்யூஷன் லிமிடெட் அபாயகரமான கழிவு அகற்றும் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது அவை தற்போது ஒவ்வொரு லாரியாக நீண்ட வரிசையில் குப்பைகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளது இங்கு பட்டாசு கழிவு குப்பைகள் பத்திரமாக சேமிக்கப்பட்டு பின்னர் படிப்படியாக கழிவுகளை அகற்றும் பணியில் இங்குள்ள ஊழியர்கள் ஈடுபடுவார்கள் தற்போது வரை 50 டன் அளவிற்கு பட்டாசு கழிவு குப்பைகள் வந்தடைந்துள்ளது