தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*
தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு...*;
விருதுநகரில் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் - 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு... விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அரசு எஸ்சி. எஸ்டி அலுவலர் ஆசிரியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் ஜெயராம் தலைமையில் SC/ST மக்கள் அதிக அளவில் அரசு வேலை வாய்ப்பு பெறும் நுழைவுப் பணிகளான அலுவலக உதவியாளர்கள்,தூய்மை பணியாளர்கள்,வாட்ச்மேன்கள், உள்ளிட்ட குரூப் டி க்கான பணியிடங்களை ஒழித்து அதனை தனியார் ஒப்பந்த பணிகளாக மாற்றி அமைத்து குறைந்த கூலி கொடுத்து ஏழை, எளிய மக்களிடம் அதிக உழைப்பை சுரண்டும் தமிழக அரசின் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும், விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிட நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் அகமது ஹாஜிரா பாத்திமா தனது திருமண நாளை கணவருடன் சேர்ந்து பழங்குடியினர் நல அலுவலகத்தில் வைத்து வெடிவெடித்து கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஆதிதிராவிட நலத்துறையை கண்டித்தும், விருதுநகர் மாவட்ட எஸ்சி/ எஸ்டி / பற்றாளர் கூட்டத்தில் அனைத்து துறை மாவட்ட அலுவலகங்களும் பங்கேற்பதை உறுதி செய்யாமல் தொடர்ந்து கண்துடைப்புக்காக பற்றாளர் கூட்டத்தினை நடத்தியதைக் கண்டித்தும் பலமுறை கோரிக்கை வைத்தும் விருதுநகர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்டத்தில் உள்ள கல்வித்துறை அலுவலகங்களில் பாபாசாகேப் அம்பேத்கரின் திருவுருவப் படத்தினை வைக்க மறுக்கும் மாவட்ட கல்வித்துறையை கண்டித்தும் 50க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்