நாமக்கல்லில் தூய்மையே சேவை விழிப்புணர்வு பேரணி 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதிமொழி ஏற்று ஊர்வலமாக சென்றனர்!

பேரணியை நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணலட்சுமி, நந்தினிதேவி, சரோஜா ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

Update: 2024-09-19 12:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாநகராட்சி சார்பில் தூய்மையே சேவை- 2024 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செப்டம்பர்-19 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை இரு வார காலத்திற்கு நடத்தப்படுகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்ட, மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியின் முன்னதாக,நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி, அக்கல்லூரி வளாகத்தில் இருந்து, தூய்மையே சேவை உறுதி மொழியை வாசிக்க அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து அதனை ஏற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேரணியை நாமக்கல் மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி அவர்கள் முன்னிலையில் மாமன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணலட்சுமி நந்தினிதேவி, சரோஜா ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர் இந்தப் பேரணியானது, நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் இருந்து தொடங்கி, திருச்சி சாலை, மணிக்கூண்டு, அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் வழியாகச் சென்று, மீண்டும் கல்லூரி வளாகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பொதுமக்களுக்கு பதாகைகள் மூலமாகவும் விளம்பர வாகனங்கள், துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இதில் வீடுதோறும் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர் ஒப்படைக்கவும் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகளை பயன்படுத்தக்கூடாது என்றும் அதற்கு மாற்றாக மஞ்சப்பைகளை பயன்படுத்துமாறும்தெருக்களில் குப்பைகளை போடாமல் குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர் ஒப்படைக்கும்படி பேரணியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரணியில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர்,முனைவர் மா.கோவிந்தராசு , அரசு மகளிர் கலைக்கல்லூரி முனைவர் ச.ஜெயந்தி,நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முனைவர் க. கௌசல்யா தேவி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர், மாநகராட்சி அலுவலர் திருமூர்த்தி, துப்புரவு ஆய்வாளர்கள் செல்வகுமார் பாஸ்கரன், ஜான் ராஜா துப்புரவு, களப்பணி உதவியாளர் சபரிநாதன், துப்புரவு பணியாளர் மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை இந்திய திட்ட மேற்பார்வையாளர்கள் , பரப்புரையாளர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Similar News