தஞ்சாவூரில் மாநகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை மாலை மேற்கொண்ட சோதனையில் 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையப் பகுதியிலுள்ள 50க்கும் அதிகமான கடைகளில், தமிழக அரசால் தடை விதிக்கப்பட்ட நெகிழிப் பைகள் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் திங்கள்கிழமை மாலை சோதனை மேற்கொண்டனர். இச்சோதனையில் ஏறத்தாழ 500 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகளுக்கு ரூ. 6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.