கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தி தலா ரூபாய் 50,000 வழங்கி ஆறுதல் தெரிவித்தார் தொல். திருமாவளவன்
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தி தலா ரூபாய் 50,000 வழங்கி ஆறுதல் தெரிவித்தார் தொல். திருமாவளவன்;
கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தி தலா ரூபாய் 50,000 வழங்கி ஆறுதல் தெரிவித்தார் தொல். திருமாவளவன் கரூரில் கடந்த 27ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தவர்களின்குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் சமுதாய அமைப்புச் சேர்ந்த தலைவர்களும் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து நிதி உதவியும் வழங்கி வருகின்றனர் இந்நிலையில் இன்று கரூருக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் , உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை கரூர்-கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு வரவழைத்து நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கட்சியின் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடம் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து துயர சம்பவத்தில் உயிரிழந்த 41 பேர் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவி தொகையாக தலா 50.000 வழங்கி ஆறுதல் தெரிவித்தார் தொல். திருமாவளவன். இந்த நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் மாவட்ட மாநில நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்