நீலகிரி மாவட்டத்தில் உள்ள 522 பள்ளிகளில் பயிலும் 20,042 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 522 பள்ளிகளில் பயிலும் 20,042 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார்
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 522 பள்ளிகளில் பயிலும் 20,042 மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தை சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம், உதகை ஊராட்சி ஒன்றியம், தொட்டபெட்டா ஊராட்சி, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நடைபெற்ற இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சீரூடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசியபோது :- பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் விலையில்லா சீருடைகள் சரியான முறையில் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழ்நாடு அரசு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் விலையில்லா சீருடை 2024-2025 கல்வியாண்டில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாணவ, மாணவியர்களுக்கும் வருடத்திற்கு நான்கு இணை சீருடைகள் வழங்கப்பட்டு வருகிறது. சீருடைகள் மாணாக்கர்களுக்கு சரியான முறையில் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், இம்முறை தைக்கப்பட்ட சீருடைகள் நேரடியாக பள்ளிகளுக்கு சென்று சமூகநலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் தையற் தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் விநியோகம் செய்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள 522 பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் 6,830 மாணவர்களும், 6,792 மாணவியர்களும், 6 முதல் 8ம் வகுப்பு வரை 3,304 மாணவர்களும் மற்றும் 3,116 மாணவிகளும் என மொத்தம் 20,042 மாணாக்கர்கள் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற உள்ளனர். அரசு பள்ளிகளில் கல்வி கற்றலும், உட்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் பல அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன்வரவேண்டும் என தெரிவித்தார்... நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் லட்சிமி பவ்யா தண்ணீரூ, உதகை சட்டபேரவை உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட ஊராட்சித்தலைவர் பொன்தோஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஷோபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.