பரமத்தி வேலூரில் ரூ.5.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்.
பரமத்தி வேலூரில் ரூ.5.5 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் போனது.;
பரமத்தி வேலூர், ஆக.19: பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண் சந்தை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் போனது. பரமத்தி வேலூரில் செயல்ப டும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை தோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து 330 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனர். அதிகபட்சமாக கிலோ ரூ.66.99க்கும், குறைந்தபட்ச மாக ரூ.45.80க்கும், சராசரியாக ரூ.56.89க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 87 ஆயிரத்து 684க்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 10 ஆயிரத்து 940 கிலோ தேங் காய்களை விவசாயிகள் கொண் டுவந்திருந்தனர். இதில் அதிக பட்சமாக கிலோ ரூ.61.76 க்கும். குறைந்தபட்சமாக ரூ.50.45க்கும், சராசரியாக ரூ.58.81க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 5 லட்சத்து 51 ஆயிரத்து 923 க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.