பெஞ்சல் புயல்-ரூ.55,16,250- மதிப்பில் நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

பெஞ்சல் புயல்-ரூ.55,16,250- மதிப்பில் நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைத்தார் ஆட்சியர் தங்கவேல்.

Update: 2024-12-05 11:10 GMT
பெஞ்சல் புயல்-ரூ.55,16,250- மதிப்பில் நிவாரண பொருட்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைத்தார் ஆட்சியர் தங்கவேல். பெஞ்சல் புயல் வெள்ளம் காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு மக்களுக்கு  ரூ.55,16,250/- மதிப்பிலான நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை   மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுப்பி வைத்தார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஃபெஞ்சல் புயல் வெள்ளம் காரணமாக கனமழையினால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை  மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அனுப்பி வைத்தார். புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் வழங்கும் பொருட்டு, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் சங்கம் & ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கம், கரூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், குவாரி உரிமையாளர்கள் சங்கம், ஆவின் நிறுவனம், குடிநீர் பாட்டில் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் ஊரக வளர்ச்சித்தறை பொதுநிதி மூலம், துவரம் பருப்பு 1 கி.கி, அரிசி 5 கி.கி, சர்க்கரை 500 கிராம், எண்ணெய் 500 மிலி, உப்பு 1 கிகி, மிளகாய்த்தூள் 100 கிராம், மல்லி 100 கிராம், சாம்பார் தூள் 100 கிராம், ரசப்பொடி 100 கிராம், கடுகு 100 கிராம், வெந்தயம் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், டீ தூள் 100 கிராம், தீப்பெட்டி 12, காப்பித்தூள் 2 பாக்கெட், சீரகம் 100 கிராம் மற்றும் மிளகு 50 கிராம் ஆகிய பொருட்கள் கொண்ட 3000 பைகள், 9,800- பெட்சீட்கள், 500 பாய்கள், 3000 நாப்கின்கள், 98 குடிநீர் பாட்டில்கள் கொண்ட பெட்டிகள், 85 பிஸ்கட் பெட்டிகள், 770 பால் பவுடர் பாக்கெட்டுகள், 5 கி.கி அரிசியுடைய 66 பைகளும், 25 கிலோ எடை உடைய 8 கோதுமை மற்றும் ராகி பைகளும் என மொத்தம் ரூ.55,16,250/- மதிப்பிலான 6 வாகனங்கள் மூலம் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வினோத்குமார், கிருஷ்ணமூர்த்தி, வட்டாட்சியர் முருகன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Similar News