கரூர் மாவட்டத்தில் 5.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
கரூர் மாவட்டத்தில் 5.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.;
கரூர் மாவட்டத்தில் 5.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதன் எதிரொலியாக தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்துள்ளது. பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. இதன் அடிப்படையில்.கரூரில் 2.40 மில்லி மீட்டரும், க.பரமத்தியில் 2.20 மில்லி மீட்டரும், மாயனூரில் 1.00 மில்லி மீட்டர் என மொத்தம் 5.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது . இதனுடைய சராசரி அளவு 0.47 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .