ஆண்டிபட்டி அருகே 563 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு கடன் உதவி வழங்கும் முகாம் நடைபெற்றது
563 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.25 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகளிர் குழு உறுப்பினர்களுக்கு நலத்திட்ட மட்டும் கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் (09.09.2024) மதுரை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தொடங்கிவைத்ததை தொடர்ந்து, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கூட்டரங்கில் 563 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.52.25 கோடி மதிப்பிலான கடனுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா,, சட்டமன்ற உறுப்பினர்கள் என்.இராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமார் (பெரியகுளம்) ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.