அச்சரப்பாக்கம் மழை மலை மாதா 57- ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அச்சரப்பாக்கம் மழை மலை மாதா 57- ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!;

Update: 2025-10-03 07:52 GMT
அச்சரப்பாக்கம் மழை மலை மாதா 57- ஆம் ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்! செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கத்தில் அமைந்துள்ள மழை மலை மாதா திருத்தளத்தில் பெருவிழா நிகழ்ச்சி கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. அச்சிறுப்பாக்கம் கொடி பவனி ஆனது ஜோசப் பள்ளி வளாகத்தில் இருந்து திருக்கோடி பவனி 6.30 மணிக்கு அருள் தளத்தை வந்தடைந்தது. பின்பு மழை மலை மாதா ஆலயம் வந்தடைந்து தூத்துக்குடி மறை மாவட்டஆயர் ஸ்டீபன் தலைமையில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்விழாவில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,கேரளா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை அருள் தல அதிபர் சின்னப்பர் ஏற்பாடு செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து வருகின்ற சனிக்கிழமை அன்று தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

Similar News