சற்குரு சந்திரசேகர சுவாமிகளின் 6வது குரு பூஜை

திரளான பக்தர்கள் தரிசனம் - அன்னதானம் நடைபெற்றது

Update: 2024-07-25 15:48 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திரளி ஊராட்சியில் அமைந்துள்ள சற்குரு ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் 6வது குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சந்திரசேகர சுவாமிகள் ஜீவ சமாதிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு விசேஷ தீபாரதனை பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

Similar News