ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் மார்ச். 6ம் தேதி நடைபெற உள்ளது
ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் மார்ச். 6ம் தேதி நடைபெற உள்ளது;
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நகர்ப் பகுதியில் அமைந்துள்ள இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோவில் பொங்கல் விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி வரும் மார்ச். 6ம் தேதி வியாழக்கிழமை நடைபெறும் என இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.