திருச்சி: 6 செல்போன்கள் திருட்டு

கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் 6 செல்போன்கள் திருட்டு;

Update: 2025-04-27 13:11 GMT
திருச்சி சுப்பிரமணியபுரம் அவ்வையார் தெரு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (51). இவர் அண்ணாமலை நகர் மலர் சாலையில் கடந்த 1½ வருடங்களாக கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த கட்டிடம் கட்டும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நி லையில் சம்பவத்தன்று வேலையில் ஈடுபட்ட தொழிலாளர்களின் 6 செல்போன்கள் மற்றும் ரூ.8 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திரு டிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News