நாட்றம்பள்ளி அருகே ஆட்டோ விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்!

நாட்றம்பள்ளி அருகே ஆட்டோ விபத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்!;

Update: 2025-08-16 04:33 GMT
நாட்றம்பள்ளி அருகே முன்னாள் சென்றுகொண்டிருந்த ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம்! அரசு மருத்துவமனையில் அனுமதி! திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பங்களாமேடு தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடி நோக்கி ஆட்டோ சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த கார் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் படுகாயம் அடைந்தனர் பின்னர் இது குறித்து தகவல் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த நசீர் அகமத் என்பவரின் மகன் முகமது அபிஸ் (18). இதயத்துல்லா என்பவரின் மனைவி மெஹருண்ணிநிஷா (45), இதயத்துல என்பவரின் மகள் அபியா (19), அப்துல் ரஷீத் என்பவரின் மகன் ரியாஸ்( 44), இதயத்துல்லா மகள் தவசியா (17), நசீர் முஸ்தாக்(65) என்பதும் வெலக்கல் நத்தம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் கட்டு போட்டுக்கொண்டு ஆட்டோவில் வீட்டிற்கு சென்றபோது விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதனை அடுத்து நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு கால் முறிவு ஏற்பட்டு கட்டுப்போட சென்று மீண்டும் ஆட்டோவில் வீடு திரும்பிய போது பின்னால் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News