நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தகவல்.

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மோகனூர், பரமத்தி, நாமக்கல், திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2025-11-15 12:49 GMT

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பொருட்டு, 1629 வாக்குச்சாவடி நிலை அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கும் பணிகள் கடந்த 04.11.2025 அன்று தொடங்கப்பட்டு இப்பணி 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களுக்கு சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவம் குறித்த தகவல்களுக்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணுடன், வாக்காளர்களுக்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட இடங்களில் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொண்டு சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு குறித்த தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான கைபேசி எண்கள் கீழ்கண்டவாறு வழங்கப்பட்டுள்ளது.வ. எண் தொகுதி எண் மற்றும் தொகுதியின் பெயர் வாக்காளர் பதிவு அலுவலர் பெயர் பதவி அலைபேசி எண் உதவி மையம்1 92-இராசிபுரம்(தனி) திரு.V.முருகன் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர் பொருள் பாதுகாப்பு அலுவலர், நாமக்கல் 9445000232 04287-222840வட்டாட்சியர் அலுவலகம், இராசிபுரம்2 93-சேந்தமங்கலம்(ப.கு.) S.சுந்தரராஜன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) நாமக்கல் 9445461743 6282228034வட்டாட்சியர் அலுவலகம், சேந்தமங்கலம்3 94-நாமக்கல் .V.சாந்தி வருவாய் கோட்டாட்சியர், நாமக்கல் 9445000431 04286-233901வட்டாட்சியர் அலுவலகம், நாமக்கல்4 95-பரமத்தி- வேலு’ர் .M.கிருஷ்ணவேணி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், நாமக்கல் 9445477850 04268-250099வட்டாட்சியர் அலுவலகம்5 96-திருச்செங்கோடு .P.S.லெனின் வருவாய் கோட்டாட்சியர், திருச்செங்கோடு 9445000432 04288-253811வட்டாட்சியர் அலுவலகம்,பரமத்தி- வேலு’ர்6 97-குமாரபாளையம் .K.A.சுரேஷ்குமார் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர், நாமக்கல் 7338801265 04288-246256வட்டாட்சியர் அலுவலகம், குமாரபாளையம்எனவே, சிறப்பு தீவிர திருத்தத்தினை நடத்திட பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார்.


Similar News