திருச்செந்தூரில் 60 அடி வரை கடல் உள்வாங்கியது!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் 60 அடி வரை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் தெரிந்தன;

Update: 2025-04-12 08:37 GMT
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் 60 அடி வரை உள்வாங்கியதால் பாசி படா்ந்த பாறைகள் தெரிந்தன. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோவில் அருகே கடல் அமாவாசை, பவுா்ணமி நாள்கள், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய நாள்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது. இதே போல இன்று அதிகாலை 4.12 மணி முதல் நாளை (ஏப்.13) ஞாயிற்றுக்கிழமை காலை 6.03 மணி வரை பவுா்ணமி உள்ளது. இதன் காரணமாக கோயில் கடற்கரையில் அய்யா கோயில் அருகே சுமாா் 60 அடி தூரம் கடல் உள்வாங்கி பச்சைப்பாசி படா்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. இருந்த போதிலும் பக்தா்கள் எவ்வித அச்சமுமின்றி வழக்கம் போல கடலில் நீராடினா்.

Similar News