உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: பயனாளிகளுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.;

Update: 2025-07-15 10:26 GMT
அரியலூர், ஜூலை 15- அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த ஆதனக்குறிச்சியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், 24 பயனாளிகளுக்கு ரூ.6.32 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இம்முகாமை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்து, மேற்கண்ட பயனிகளுக்கு  ரூ.6,32,438 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில், ஊரகம் மற்றும் நகரப் புறங்களில் அக்டோபர் 14 ஆம் தேதி வரை 95 இம்முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படுகிறது. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொது மக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது. தன்னார்வலர்கள், ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விபரங்கள்., அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசுத்துறைகளின் சேவைகள், திட்டங்களை விவரித்து, அதில் பயனடைவதற்கான தகுதிகள்,தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும் விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனர்.முன்னதாக அவர், வளாகத்தில் வழங்கப்பட்ட அரசின் சேவைகளை பார்வையிட்டார். முகாமுக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட ஊராக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் எம்.உமாமகேஸ்வரி, செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். :

Similar News