சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 65-வது ஆண்டு விழா

போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்;

Update: 2025-03-23 05:07 GMT
சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 65-வது ஆண்டு விழா நேற்று கோட்டை மைதானம் அருகே உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவுக்கு சங்க தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். செயலாளர் பாபுகுமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும் போது, ‘கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளுக்கு நல்ல கட்டமைப்பு அவசியம். கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, விடாமுயற்சி ஆகியவை இருந்தால் வாழ்வில் நிச்சயம் சாதிக்க முடியும். சேலத்தில் இருந்து தமிழக கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி சிறந்த வீரர்களாக உருவெடுத்து இந்தியாவுக்கே பெருமை சேர்க்க வேண்டும்’ என்றார். தேசிய அளவில் சிறந்து விளங்கிய வீரர், வீராங்கனைகள் மற்றும் இந்தாண்டில் வெற்றி பெற்ற அணிகளுக்கு போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கோப்பையை வழங்கி பாராட்டினார். இந்த விழாவில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமசாமி, ஜே.எஸ்.டபிள்யு. ஸ்டீல் நிறுவன பொதுமேலாளர் (மனிதவள பிரிவு) அரிராஜ், முதன்மை மேலாளர் பாரதி பழனிசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News