மாவட்டத்தில் 65மி.மீ மழைப்பொழிவு பதிவு
திண்டுக்கல் மாவட்டத்தில் 65மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, அதிகபட்சமாக சத்திரப்பட்டியில் 21.60மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது;
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அவ்வகையில் வானிலை ஆய்வு மையம் திண்டுக்கல் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் 25.05.2025 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் 26.05.2025 திங்கட்கிழமை காலை வரை மழைப்பொழிவின் விபரம். திண்டுக்கல்லில் 7மி.மீ மறையும், காமாட்சிபுரத்தில் 5.70மி.மீ மழையும், சத்திரப்பட்டியில் 21.60மி.மீ மழையும், வேடசந்தூரில் 4மி.மீ மழையும், புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் 4மி.மீ, பழனியில் 12மி.மீ மழையும், கொடைக்கானல் ரோஸ் கார்டனில் 6மி.மீ மழையும், கொடைக்கானல் ப்ரையண்ட் பார்க் பகுதியில் 4.70மி.மீ மழையும் ஆக மொத்தம் மாவட்டத்தில் 65மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சத்திரப்பட்டியில் 21.60மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.