நாட்ராயன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ. 6.5 லட்சம் வசூல்
நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 6.5 லட்சம்;
வெள்ளகோவில் மேட்டுப்பாளையம் கிராமம் மாந்தபுரத்தில் நாட்ராயன் நாச்சிமுத்து அய்யன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலில் பக்தர்களுக்கு காணிக்கை செலுத்த 6 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு பிறகு இந்து சமய அறநிலைத்துறை சிவன்மலை உதவி ஆணையர் ரத்தனாம்பாள், அறநிலைத்துறை காங்கேயம் சரக ஆய்வாளர் அபிநயா, கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோளக்கவுண்டன் வலசு கே. சந்திரசேகரன் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. அவற்றில் ரூ.6 லட்சத்து 66ஆயிரம் இருந்தது. இதில் கோவில் செயல் அலுவலர் எஸ்.மாலதி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் வி.நாக ராஜ், வி.சுரேஷ் மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.