சர்க்கார்சாமக்குளம் பள்ளியில் ரூ.65 லட்சத்தில் விளையாட்டு அரங்கம் திறப்பு – ரூ.1.3 கோடி மதிப்பீட்டில் ஆய்வகங்கள் அமைக்கும் பணிகள் தொடக்கம் !

சர்க்கார்சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சி.ஆர்.எஸ் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார்.;

Update: 2025-07-11 05:57 GMT
சர்க்கார்சாமக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சி.ஆர்.எஸ் நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க கிரியப்பனவர் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஆர்.ஆர். பாலசுந்தரம், ஏ.வி. வரதராஜன் (ஏ.வி. குரூப்), ஜி. சௌந்தரராஜன் (சி.ஆர்.ஐ பம்ப்ஸ்), துளசிதரன் (ராக் அமைப்பு), பேரூராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனுடன், ரூ.1.3 கோடி மதிப்பில் அறிவியல், வேதியியல், உயிரியல் மற்றும் ரோபோட்டிக்ஸ் கணினி ஆய்வகங்களை கட்டுமானம் செய்யும் பணிகளை ஆட்சியர் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். மேலும், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்வில் உயர்ந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு சி.ஆர்.ஐ பம்ப்ஸ் டாப்பர்ஸ் விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக முன்னேற்றத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News