கரூர்-ரூ.65 லட்சம் மோசடி.2பெண்கள் உள்பட 4பேரை கைது செய்த சி பி சி ஐ டி போலீசார்

கரூர்-ரூ.65 லட்சம் மோசடி.2பெண்கள் உள்பட 4பேரை கைது செய்த சி பி சி ஐ டி போலீசார்;

Update: 2025-09-15 03:55 GMT
கரூர்-ரூ.65 லட்சம் மோசடி.2பெண்கள் உள்பட 4பேரை கைது செய்த சி பி சி ஐ டி போலீசார் கரூர் அடுத்த வெங்கமேடு கொங்கு நகரை சேர்ந்தவர் ஷாஜகான் வயது 65.ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளி. கடந்த 2015 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் மஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்த ஞான பிரகாசம் வயது 58 என்பவர் ஜெர்மன் நாட்டிலிருந்து சக்தி வாய்ந்த இருடியத்தை வாங்கி இந்தியாவில் விற்றால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறி 2015 முதல் 2019 வரை 25 தவைணகளில் 65லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட ஞானபிரகாசம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ஞானப்பிரகாசம் ஷாஜகானுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக ஷாஜகான் சிபிசிஐடி போலீசில் கொடுத்த புகாரில் ஞானபிரகாசம் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது இரண்டு மனைவிகள் ஜான்சி ராணி அருள் செல்வி ஆகியோரும் திருநெல்வேலியை சேர்ந்த பேச்சிமுத்து என நான்கு பேரையும் கைது செய்து இது தொடர்பாக ஞானபிரகாசத்தின் மகன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

Similar News