பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் கல்லூரி மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை வழங்கினார்.

தன்னுடைய மகன்களை படிக்க வைத்ததாகவும் தற்பொழுது கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தன்னுடைய மகனுடைய கல்வி கட்டண செலுத்துவதற்கு உதவி செய்திட வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த வாரம் மனு அளித்தார்.;

Update: 2025-07-08 18:02 GMT
பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தன் விருப்ப நிதியிலிருந்து பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் மோகன்ராஜ் என்ற மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ் தன் விருப்ப நிதியிலிருந்து பொறியியல் நான்காம் ஆண்டு பயின்று வரும் மோகன்ராஜ் என்ற மாணவனின் கல்லூரி கட்டணம் கட்டும் வகையில் ரூ.65,000க்கான வங்கி வரவோலையினை இன்று (08.07.2025) வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் க.எறையூர் கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் த/பெ சௌந்தர பாண்டியன் - புவனேஸ்வரி ஆகியோர்கள் கூலி வேலை செய்து தங்களுடைய மகன் மோகன்ராஜ், மகள் செல்வி.நிவேதா ஆகியோர்களை பொறியியல் பட்ட மேற்படிப்பு படிக்க வைத்தனர். இதில் எதிர்பாராத விதமாக நடராஜ் என்பவர் சென்னையில் சாரம் கட்டும் பொழுது தவறி விழுந்து 22.04.2025 அன்று இறந்துவிட்டார். இதனால் இறுதியாண்டு கணினி அறிவியல் பொறியியல் படிப்பு பயின்று வரும் மாணவன் மோகன்ராஜ் அவர்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. தனது கணவர் நடராஜ் இருந்தவரை கஷ்டப்பட்டு தன்னுடைய மகன்களை படிக்க வைத்ததாகவும் தற்பொழுது கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், ஆகையால் தன்னுடைய மகனுடைய கல்வி கட்டண செலுத்துவதற்கு உதவி செய்திட வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் கடந்த வாரம் மனு அளித்தார். மனு மீது நடவடிக்கை மேற்கொள்வதாக மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதி அளித்தார் இந்த மனுவை விசாரித்த மாவட்ட ஆட்சித்தலைவர், கல்லூரி கட்டணத்தை செலுத்தும் வகையில் ரூ.65,000 தன் விருப்ப நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்து, கல்லூரியில் கல்வி மற்றும் இதர கட்டணம் வரவோலையாக பெற்று வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்கள் பெயரில் உள்ள வங்கி கணக்கிற்கு ECS மூலம் வரவு வைத்த, அந்த வரவோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவனின் தாயார் புவனேஸ்வரி அவர்களிடம் வழங்கினார்.

Similar News