காஞ்சி மாநகராட்சி நடப்பாண்டு பட்ஜெட்...ரூ.672 கோடி

Update: 2025-04-01 03:10 GMT
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 2025 - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை, அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், மேயர் மகாலட்சுமி நேற்று தாக்கல் செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சியில், பொது, பொறியியல், வருவாய், பொது சுகாதாரம் மற்றும் நகரமைப்பு என ஐந்து பிரிவுகள் உள்ளன. இவற்றில் 2025 - 26ம் ஆண்டுக்கான வரவு - செலவினம் குறித்து மேயர் மகாலட்சுமி பட்ஜெட் விபரங்களை, நேற்று வாசித்தார். அதன்படி, மாநகராட்சியின் நடப்பாண்டு வரவினமாக 673.2 கோடி ரூபாயாக உள்ளது. செலவினமாக 672.3 கோடியாக காண்பிக்கப்பட்டு உள்ளது. உபரி நிதியாக, 85.4 லட்சம் ரூபாயாக இருக்கும் எனவும், பற்றாக்குறை இருக்காது எனவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டம் துவங்கும் முன்பாக, கழிவுநீர் வாகனங்கள் மாநகராட்சியில் சரிவர வருவதில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள், பொம்மை கழிவுநீர் லாரியை, கயிறு கட்டி இழுத்து வந்தனர். பட்ஜெட்டில் சில புதிய அறிவிப்புகளும், ஏற்கனவே உள்ள சில திட்டங்களுக்கு புது சாயம் பூசிய சில அறிவிப்புகளையும், மேயர் மகாலட்சுமி வெளியிட்டார். மொத்தம் 54 அறிவிப்பு வெளியிடப்பட்டது.

Similar News