பரமத்தியில் வழக்கறிஞர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு.

பரமத்தியில் வழக்கறிஞர் வீட்டில் ரூ.7 லட்சம் திருட்டு வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.

Update: 2024-09-18 15:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்திவேலூர், செப்.18- பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தியைச் சேர்ந்தவர் ஜெயபால்(58). பரமத்தி நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 15-ந் தேதி குடும்பத்துடன் பரமத்தியில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் 16-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது 2 படுக்கை அறையின் கதவுகளும் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.7 லட்சம் பணம் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது. மேலும் ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 5 கிலோ வெள்ளி பொருட்களும் செல் போன் ஒன்று உட்பட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிக் சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஜெயபால் பரமத்திபோலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீஸ் இன்ஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்கு பதிவு செய்து பணம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகளை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News