திடீரென்று இறந்த 7 மாத பெண் குழந்தை
குமாரபாளையம் அருகே 7 மாத பெண் குழந்தை திடீரென்று இறந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வேங்கூர் பகுதியில் வசிப்பவர்கள் பிரதாப், 25, ஜெயஸ்ரீ, 21, தம்பதியர். இவர்களுக்கு தவஷிக், 2, என்ற மகனும், புவியரசி என்ற 7 மாத பெண் குழந்தையும் இருந்தனர். இவர்கள் இருவரும் தற்போது குப்பாண்டபாளையம் பகுதியில் தங்கி, கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வருகின்றனர். டிச. 29, காலை 09:00 மணியளவில் குழந்தை புவியரசிக்கு திடீரென்று வாந்தி, பேதி ஏற்பட்டது. குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வீட்டுக்கு வந்து விட்டனர். மறுநாள் அதே போல் மீண்டும் வாந்தி, பேதி ஏற்பட்டது. இருவரும் டூவீலரில் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டது என்றார். இது குறித்து ஜெயஸ்ரீ, குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விசாரணை செய்து வருகின்றனர்.