கோவை: தம்பியை கொலை செய்ய முயன்ற அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
தம்பியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றம் முத்துக்குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.;
தம்பியை கொலை செய்ய முயன்ற வழக்கில், கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றம் முத்துக்குமாருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பகவதி செட்டிநாடு உணவக உரிமையாளரின் மகன்கள் முத்துக்குமார் மற்றும் கணேசன் இடையே சொத்து பிரிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறே இந்த வழக்கிற்கு காரணம். கணேசனுக்கு வழங்கப்பட்ட 50 லட்சத்தில் பங்கு கேட்ட முத்துக்குமார், பெற்ற 9 லட்சம் போதாது என எண்ணி, 2017-ஆம் ஆண்டு தனது வீட்டருகே கணேசனை அறிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றார். இந்த சம்பவத்தில் கணேசனுக்கு காயம் ஏற்பட்டது. போலீசார் விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் கடும் தண்டனை வழங்கியது. இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பாக வாதாடிய கூடுதல் அரசு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்திக்கு காவல் துறை பாராட்டு தெரிவித்துள்ளது.