தெரு நாய் கடித்து 7 பேர் காயம்

வில்லுக்குறி;

Update: 2025-07-03 03:03 GMT
குமரி மாவட்டம் வில்லுக்குறி பேரூராட்சி பகுதிகளில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் கொட்டப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனால் தெரு நாய்கள் பெருகி மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இந்த நிலையில் கீழப்பள்ளம் பகுதியில் தெரு நாய் ஒன்று அந்த வழியாக வந்தவர்களை கடித்து குதறிய சம்பவம் நேற்று நடந்துள்ளது. பேரூராட்சி சுகாதார பணியாளர் உட்பட 3 பெண்கள், வாரியல் விற்பனை செய்ய அந்த வழியாக நடந்து வந்த வட மாநில இரண்டு தொழிலாளர்கள் உட்பட 4 ஆண்கள் என 7 பேர் படுகாயம் அடைந்தனர். கால்நடைகளையும் விட்டு வைக்காத வெறிநாய் அங்கு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளையும் கடித்து குதறி உள்ளது. மனிதர்களையும் கால்நடைகளையும் நாய் கடித்து குதறிய சம்பவத்தால் நேற்று காலை முதல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News