சிறுமுகையில் 7 அடி நீளமுள்ள முதலை மீட்பு !
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பட்டக்காரனூர் பகுதியில் உள்ள குட்டையில் சுமார் 7 அடி நீளமுள்ள ஆண் முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.;
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பட்டக்காரனூர் பகுதியில் உள்ள குட்டையில் சுமார் 7 அடி நீளமுள்ள ஆண் முதலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பொதுமக்களின் தகவலின் பேரில் வனத்துறையினர் மற்றும் என்.டபிள்யூ.சி.டி குழுவினர் இணைந்து மொத்தம் 6 மணி நேரத்துக்கு நீர் வெளியேற்றும் பணி மற்றும் தேடுதல் நடவடிக்கையில் நேற்று ஈடுபட்டனர். பின்னர் முதலை பத்திரமாக பிடிக்கப்பட்டு, வாய் பகுதி கயிறு மூலம் கட்டப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் உத்தரவின்படி, பவானிசாகர் நீர்த்தேக்க பகுதியிலுள்ள பெத்திக்குட்டையில் முதலை பத்திரமாக விடுவிக்கப்பட்டது. முதலை பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.