குண்டடம் அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி
குண்டடம் அருகே தெரு நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி;
குண்டடத்தை அடுத்த மாரப்பகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தோட்டத்தில் 10 வெள்ளாடுகள் மற்றும் கோழிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று வழக்கம்போல் அங்குள்ள காட்டுப்பகுதியில் மேய்ச்சலுக்கு ஆடுகளை விட்டிருந்தார். அப்போது அங்கு கூட்டமாக வந்த தெருநாய்கள் கடித்ததில் 6 ஆடுகள் இறந்தது. மேலும் தோட்டத்தில் இருந்த 2 சேவல் மற்றும் 5 நாட்டுக்கோழிகளையும் நாய்கள் கடித்து குதறியதில் அவையும் பலியாகிது. இது குறித்து கிராம நிர்வாக அலுவலர், கால்நடை துறை மருத்துவர் மற்றும் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு வந்து பார்வையிட்டனர். நாய்கள் கடித்து ஆடுகள் இறந்ததற்கு மாவட்ட நிர்வாகம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று கார்த்திகேயன் கோரிக்கை விடுத்துள்ளார்