காதல் தகராறில் குழு மோதல் – 7 பேருக்கு போலீசார் வழக்கு பதிவு

கோவை கணபதியை சேர்ந்த அஸ்வின் ராம் (24), தனது முன்னாள் காதலிக்கு தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.;

Update: 2025-07-19 13:47 GMT
கோவை கணபதியை சேர்ந்த அஸ்வின் ராம் (24), தனது முன்னாள் காதலிக்கு தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து தற்போது காதலிக்கும் மாலிக் மற்றும் அவரது நண்பர்கள், அஸ்வினை சரவணம்பட்டியில் அழைத்து மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கற்கள் மற்றும் பீர் பாட்டிலால் தாக்கிக்கொண்டதில் இருபக்கத்தினரும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அஸ்வினின் புகாரில் மாலிக், சதாம், செரிப் மீது மற்றும் பெண்ணின் புகாரில் அஸ்வின் ராம், சத்தியசீலன், ஆகாஷ், நிஷாந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News