கூவத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உதவிக்குழு பென்களுக்கு ரூ 70.43 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கிய ஜெயங்கொண்டம் எம் எல் ஏ

கூவத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உதவிக்குழு பென்களுக்கு ரூ 70.43 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி எம் எல் ஏ வழங்கினார்;

Update: 2025-08-06 14:17 GMT
அரியலூர், ஆக.7- ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம்,கூவத்தூர் ஊராட்சியில் நடைபெற்று வரும், உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் பார்வையிட்டு, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், மகளிர் சுய உதவிக்குழு பென்களுக்கு ரூ 70.43 இலட்சம் மதிப்பீட்டில் கடனுதவி வழங்கியும்,பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சத்துணவு) பிரேமா,வட்டாட்சியர் இராஜமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புச்செல்வன்(கி.ஊ), ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் கலியபெருமாள் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள், ஆண்டிமடம் தெற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள்,கழக தோழர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Similar News