சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;
சாத்தூர் அருகே சின்னக்காமன்பட்டியில் புரட்சித்தலைவி முன்னாள் முதலமைச்சர் அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள சின்னக்காமன்பட்டி கிராமத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சந்திரன் தலைமையில் சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீதாராமன் ஏற்பாட்டில் அம்மாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் 1300க்குஅதிகமானவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பேராவுரணி திலீபன் கலந்து கொண்டு அதிமுக வரலாறு, எம்ஜிஆர் ன் சிறப்பு அம்மாவின் வீரவரலாறு மற்றும் எடப்பாடியாரின் நல்லாட்சி மற்றும் தற்போதைய ஆட்சியின் அவலத்தையும் திமுகவின் செயலற்ற தனத்தையும் தமிழாக மக்கள் படும் அவலங்கள் குறித்தும் சிறப்புரை ஆற்றினார். மேலும் நிகழ்ச்சியில் ஏழை எளிய மக்களுக்கு 1300க்கு அதிகமானவர்களுக்கு இலவச வேஷ்டி சேலைகள் மற்றும் நலத்திட்டங்களை விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர் கே ரவிச்சத்திரன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னால் சாத்தூர் எம் எல் மற்றும்அம்மா பேரவை மாநில இன செயலாளர் எம் எஸ் ஆர் ராஜவர்மன், எஸ்ஜி சுப்பிரமணியன், முன்னால் அருப்புக்கோட்டை எம் எல் ஏ மணிமேகலை, மற்றும் சாத்தூர் நகர செயலாளர் சாத்தூர் கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு ஒன்றிய செயலாளர்கள் நகர, ஒன்றிய கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.