ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ கிணற்றில் தவறி விழுந்த 78 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..*
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ கிணற்றில் தவறி விழுந்த 78 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்..*;
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆழ கிணற்றில் தவறி விழுந்த 78 வயது மூதாட்டியை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினர்.. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் 78 வயது மூதாட்டி இவர் அதே பகுதியில் ஊர் ஆழக் கிணற்று அருகே நடந்து சென்ற போது நிலை தடுமாறி கிணற்றுக்குள் விழுந்துள்ளார் கிணற்றில் இருந்து நீர் எடுக்கும் குழாயை இறுக்க பிடித்துக் கொண்ட மூதாட்டி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக உயிருக்கு ஆபத்தான நிலையில் மெதுவாக முழங்கல் சத்தமிட்டுள்ளார் அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் விழுந்து கிடந்த மூதாட்டியை பார்த்தவுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் தீயாணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததனர் விரைந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினர் மூதாட்டியை 10 நிமிடத்திற்குள் கயிறை கட்டி பத்திரமாக உயிருடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 78 வயது மூதாட்டி கிணற்றில் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த சம்பவம் மங்காபுரம் பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.