இன்று செப்டம்பர் -8 உலக பிசியோதெரபி மருத்துவ தினம்!

சிறப்பு கட்டுரை டாக்டர் கவியரசு, நாமக்கல் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர்

Update: 2024-09-08 04:47 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இன்றைய இந்தியாவின் மருத்துவம் மிகவும் வளர்ச்சி அடைந்த ஒன்றாக இருக்கின்றது. இதில் பிசியோதெரபி மருத்துவம் மிக முக்கியமாக வளர்ந்துக் கொண்டிருக்கும் துறையாகும். பக்க விளைவுகள் இல்லாத நோயாளிகளின் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான உடல் திறனை அதிகரிக்கவும் உடல் இயக்க செயல்பாடுகளை மேம்படுத்தவும் ,வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் மிகவும் உதவி புரியும் மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடு இருக்க போவதில்லை.1996ஆம் ஆண்டில்,உலக பிசியோதெரபி மருத்துவ கூட்டமைப்பு (WCPT) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 8 ஆம் தேதியை உலக பிசியோதெரபி தினமாக அறிவித்தது . பிசியோதெரபி மருத்துவத்தின் தந்தை பெர் ஹென்ரிக் லிங் என்பவர் தான் பிசியோதெரபி பயிற்சியை முதன் முதலில் நோயாளிகளுக்கு அளித்தார்.பிசியோதெரபியின் தந்தை, பெர் ஹென்ரிக் லிங் ஜிம்னாஸ்டிக்ஸில் நிபுணத்துவம் பெற்றவர் . அவர் உடல், உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்த, பராமரிக்க மற்றும் மீட்டெடுக்க அவர் உடல் இயக்கத்தை பயன்படுத்தினார். பிசியோதெரபி மருத்துவம் 18ம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது என்றாலும் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இறுதி வரை ஆரோக்கியத்தை பேணி காத்து மாபெரும் சக்தியாக மருத்துவ உலகில் உருவெடுத்து வரும் துறையாகும். உடற்பயிற்சி செய்தால் ஆரோக்கியம் கிட்டும் என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த ஆரோக்கியத்தை கொடுப்பது பிசியோதெரபி மருத்துவம் நோயின் தன்மை அறிந்து நோயின் வீரியம் தெரிந்து அதற்கு தகுந்தாற்போல தசை மற்றும் எலும்பு நரம்புகளின் பலம் அறிந்து மேற்கொள்ளும் பயிற்சிகளே பிசியோதெரபி மருத்துவத்தின் சிறப்பியல்பு எனலாம். பிசியோதெரபி மருத்துவம் முதலாம் உலகபோர் நடைபெற்ற காலத்தில் அடிபட்ட பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு போரில் சிகிச்சை அளிப்பதற்காக மேலை நாடுகள் பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொண்டனர். இப்படியாக வளர்ந்த இந்த மருத்துவ சிகிச்சை நாளடைவில் பொதுமக்களுக்கும் பயன்படும் வகையில் எலும்ப, நரம்பு, தசை, நுரையீரல், சார்ந்த நோய்கள் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் காயங்கள் மற்றும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளித்து பூரண குணமடைய செய்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு சுகபிரசவம் அடைவதற்கு பிசியோதெரபி பயிற்சி மிகவும் உதவியாக இருக்கிறது. குழந்தை முதல் முதுமை வரை அனைத்து வகையான பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது. அறுவை சிகிச்சையே தேவைப்படாத அளவிற்கு தண்டுவட பிரச்சனைகளில் மிக முக்கிய சிகிச்சை அளிக்கிறது.இன்றைய நவீன பிசியோதெரபி மருத்துவத்தில் எந்த வித மருத்துவ உபகரணங்கள் இல்லாமலே வெறும் கையை பயன்படுத்தி உடலில் உள்ள எலும்புகளின் அடிப்படை கூறுகளை சரியாக செய்து வலி மற்றும் வாதத்தை உடனடியாக குணப்படுத்துவது மிக சிறந்த மருத்துவ வரபிரசாதம். சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து வகையான எலும்பு மற்றும் நரம்பு வலிகளை குணமடைய செய்யும் மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம் உடற்பயிற்சி மட்டுமில்லாது இயற்பியல் செயல்பாட்டின் பல பரிணாம அம்சங்களின் தொடர்ச்சியாக கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் மின்னூட்ட காந்த சிகிச்சை அல்ட்ராசவுண்ட் அலைகற்றை மூலமும் ,லேசர் கற்றை மூலமும் வெப்ப கதிர் மூலம் வலிகளையும் வாதத்தையும், உடல் பருமனையும் குறைக்கும் உபகரணங்கள் கொண்டு சிகிச்சை அளித்து வரும் மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம். இவ்வாறாக வலி மற்றும் வாதத்தால் பாதித்தாலும் அதன் தாக்கமே தெரியாத அளவிற்கு சிகிச்சை அளித்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சிகிச்சையே பிசியோதெரபி சிகிச்சை இன்று பிசியோதெரபி மருத்துவம் சமுதாயத்தில் மிக முக்கிய அபரிதமான வளர்ச்சியை கொண்டுள்ளது.
இந்த 2024 ஆண்டு உலக பிசியோதெரபி தினத்தின் கவனம் இடுப்பு வலி பற்றியது இடுப்பு வலியை எப்படி குறைக்கலாம்
அதன் தடுப்பு மற்றும் சிகிச்சையில் பிசியோதெரபியின் பங்கு என்பதை பற்றியதாகும். உலகளவில் உடல் இயக்க பிரச்சனை மூலம் மாற்றுத்திறனாளிகளாக வருவதற்கு இடுப்பு வலி முக்கிய காரணமாகும். உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுப்படி 2020 இல் 619 மில்லியன் மக்கள் இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர் அதாவது 13 பேரில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையாக அறுவை சிகிச்சை அல்லாத பொருத்தமான சிகிச்சையை வழங்குவதில் பிசியோதெரபி மருத்துவர்கள் தனித்தன்மையுடன் உள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இந்தியாவில் 2021 ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அலைடு ஹெல்த் மற்றும் ஹெல்த் கேர் சட்டம் இயற்றி பிசியோதெரபி மருத்துவம் தன்னிச்சையாக நோய் கண்டறிதல் மற்றும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை செய்வதற்கு சட்டம் இயற்றியது இந்த சட்டம் பிசியோதெரபி மருத்துவ வளர்ச்சிக்கு மேலும் ஒரு மைல் கல்லாக அமைத்துள்ளது.

Similar News