99-காபி வளாகத்தில் பாத அழுத்த சிகிச்சை துவக்க விழா
99-காபி வளாகத்தில் பாத அழுத்த சிகிச்சை துவக்க விழா
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே அண்ணாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் 99-காபி வளாகத்தில் பாத அழுத்த சிகிச்சை துவக்க விழா 99-குழுமத்தில் இயக்குனர் மனோசாலமன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் திரைப்பட இயக்குனர் என்.லிங்குசாமி கவிஞர் எழுத்தாளர் பாடலாசிரியர் அறிவுமதி, தலைவர் எக்ஸ்னோரா சர்வதேச அமைப்பு செந்தூர்பாரி, எழுத்தாளர் இயக்குனர் திரைக்கதை ஆய்வாளர் அஜயன்பாலா, ஃபஸ்ட் வேர்ல்ட் கம்யூனிட்டி நிறுவனர் டாக்டர் சி.கே.அசோக் குமார், பாத நிவாரணா உரிமையாளர் அம்பிகாராஜ், இயக்குனர் சரன், நடிகர் அபிஷேக், உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். பாத நிவாரண அழுத்த சிகிச்சை தொடங்கிவைத்தனர். மேலும் இந்த சிகிச்சை மூலம் மன அழுத்தம் குறைதல், நல்ல மனநிலை அளித்தல், உடல் வலிமை பெறுதல், செரிமானத்தை மேம்படுத்துதல், நீரழிவு நோயை கட்டுப்படுத்துதல் , தலைவலி மற்றும் உடல் வலி, ரத்த ஓட்டம் சீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் இந்த சிகிச்சை மூலம் பயன்பெற முடியும் என தெரிவித்தனர்.