ஏற்காடு 8-வது கொண்டை ஊசி வளைவில்

போலீசார் குவிப்பு;

Update: 2025-02-24 03:05 GMT
ஏற்காடு 8-வது கொண்டை ஊசி வளைவில் அந்தோணியார் கெபி, மாதா புகைப்படம் வைக்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட நாட்களாக வழிபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதிக்கு இந்து முன்னணி நிர்வாகிகள் சிலர் செல்ல இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து ரூரல் துணை போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் 8-வது கொண்டை ஊசி வளைவு பகுதியை பார்வையிட்டனர். பின்னர் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் ஏற்காடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News