சேலத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி 8-ந் தேதி தொடக்கம்

வனத்துறை அதிகாரிகள் தகவல்;

Update: 2025-03-02 08:09 GMT
தமிழகத்தில் ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை முடிந்த பின்பு ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு வருகிற 8 மற்றும் 9-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நீர்ப்பறவைகள் கணக்கெக்கும் பணி நடக்கிறது. 15 மற்றும் 16-ந்தேதி ஆகிய 2 நாட்கள் நில பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு, வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் நடக்கிறது. இந்த பணியில் வனத்துறையுடன் சேர்ந்து பறவை ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம். கணக்கெடுப்புப் பணியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள வனத்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று சேலம் மாவட்ட வன அலுவலர் கஷ்யப் ஷஷாங்க் ரவி தெரிவித்து உள்ளார்.

Similar News