மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மார்ச் ஒன்றாம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தமிழ்நாடு நிதி அமைச்சர்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மார்ச் ஒன்றாம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினர்.*;

Update: 2025-03-02 15:35 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மார்ச் ஒன்றாம் தேதி அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினர். விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக திமுக நிர்வாகிகள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் நிலையில் விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் போஸ் ஏற்பாட்டில் மல்லாங்கிணர் அரசு மருத்துவமனையில் பிறந்த 8 குழந்தைகளுக்கு தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தங்கமோதிரத்தை பரிசாக வழங்கினார். அப்போது தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கினார். அதனை தொடர்ந்து மல்லாங்கினர் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தேவையான உபகரணம் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் தங்கம்தென்னரசு வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வர்த்தக அணி தலைவர் இன்பம், துணை அமைப்பாளர் தமிழ்வாணன், உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Similar News