உதகையில், விவசாய கடன் மானிய தொகையில், 8 லட்சம் ரூபாய் மோசடி

அதிகாரி கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-04-22 13:58 GMT
உதகையில், விவசாய கடன் மானிய தொகையில், 8 லட்சம் ரூபாய் மோசடி செய்த வங்கி அதிகாரி கைது செய்யப்பட்டார். நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள பாரதஸ்டேட் வங்கியில், சென்னை யைச் சேர்ந்த செந்தில்குமார், 46, ஜூனியர் அதிகாரியாக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். சமீபத்தில் இவருக்கு பணி மாறுதல் உத்தரவு வந்ததால் வேறு இடத்திற்கு செல்ல தயாரானார். இதற்கிடையில்வங்கியில் தணிக்கை பணி நடந்தது.அப்போது செந்தில்குமார் அதில், மானியத்துடன் கூடிய விவசாய கடன் வழங்கும் பிரி வில், பயனாளிகளுக்கு மானிய தொகை வழங்கியதில் செந்தில்குமார் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தது. மீண்டும் நடந்த முழு தணிக்கையில், 8 லட்சம் ரூபாய் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்து, வங்கி தலைமை மேலாளர் ரமேஷ் பாபு அளித்த புகாரின் அடிப்படையில், உதகை பி1 காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News