சுடுகாட்டில் பதுக்கி வைத்த 8கிலோ கஞ்சா பறிமுதல்: மூன்று பேர் கைது

தூத்துக்குடி அம்பேத்கர் நகர் சுடுகாட்டுப் பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த டியோ முருகன், கோவிந்தராஜா, சடை மாரியப்பன் ஆகிய மூன்று பேர் கைது 4 லட்ச ரூபாய் மதிப்பிலான எட்டு கிலோ கஞ்சா பறிமுதல்;

Update: 2025-06-19 01:18 GMT
தூத்துக்குடி அம்பேத்கர் நகர் சுடுகாட்டுப் பகுதியில் கஞ்சாவுடன் பதுங்கி இருந்த டியோ முருகன், கோவிந்தராஜா, சடை மாரியப்பன் ஆகிய மூன்று பேர் கைது 4 லட்ச ரூபாய் மதிப்பிலான எட்டு கிலோ கஞ்சா பறிமுதல் தூத்துக்குடி மாநகர பகுதியில் இளைஞர்கள் கூலி தொழிலாளர்கள் மற்றும் மீனவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தூத்துக்குடி அம்பேத்கார் நகர் பகுதியில் சுடுகாடு அருகே ஒரு கும்பல் பதுங்கி இருப்பதாக வடபாகம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது இதைத்தொடர்ந்து அந்தப் பகுதிக்குச் சென்ற வட பாகம் காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட காவல்துறையினர் சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த டியோ முருகன், ரகமத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கோபி என்ற கோவிந்தராஜா பூ பாண்டிபுரம் பகுதியைச் சேர்ந்த சடை மாரியப்பன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் விற்பனைக்காக கடத்திவரப்பட்ட பார்சல் செய்யப்பட்ட எட்டு கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது இதை எடுத்து வடபாகம் காவல்துறையினர் ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 8 கிலோ கஞ்சா வை பறிமுதல் செய்ததுடன் மூன்று பேரையும் கைது செய்து வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன. கைது செய்யப்பட்டுள்ள மூன்று பேரும் ஏற்கனவே கஞ்சா மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்பு உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது இதைத்தொடர்ந்து காவல்துறையினர் கஞ்சாவை இவர்கள் எங்கிருந்து விற்பனைக்காக கொண்டு வந்தனர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News