மூலனூர் ஊராட்சி பகுதியில் ரூ 80,லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி பணிகள் அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

மூலனூர் ஊராட்சி பகுதியில் ரூ 80,லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி பணிகள் அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார்

Update: 2024-08-22 15:20 GMT
மூலனூர் ஊராட்சி பகுதியில் ரூ 80,லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி பணிகள் அமைச்சர் கயல்விழி தொடங்கி வைத்தார் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கி வைத்தும் முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்துள்ள மூலனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ 80,லட்சம் மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளை துவங்கி வைத்து முடிவுற்ற பணிகளை திறந்து வைத்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பின்னர் தெரிவித்ததாவது:- மூலனூர் ஊராட்சி ஒன்றியம் தூரம்பாடி ஊராட்சி குழந்தை கவுண்டன் வலசு பகுதியில் புதிய தார் சாலை அமைத்தல், நத்தப்பாளையத்தில் ஊராட்சி அலுவலக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை செய்தும், எரசனம்பாளையம், உத்தம கவுண்டம்பாளையம் பகுதியில் பழைய தார் சாலையை புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணியையும் அதே பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கடையை திறந்தும் வைத்தும்,குமாரபாளையம் ஊராட்சி ராமபட்டணம் சாலை புதுப்பித்தல், ராசிபாளையம் சாலை புதுப்பித்தல் என சுமார் 80 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான இல. பத்மநாபன்,மாநில விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணைத் செயலாளர் கார்த்தி, மூலனூர் ஒன்றிய செயலாளர் துரை தமிழரசு மற்றும் பழனிச்சாமி, மூலனூர் பேரூர் கழகச் செயலாளர் மக்கள் தண்டபாணி,கன்னிவாடி பேரூராட்சி செயலாளர் சுரேஷ், தூரம்பாடி திமுக செயலாளர் மோகன்ராஜ்,குமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News