ஆம்பூர் அருகே ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு பணத்தை தவறவிட்ட பெண்ணை கண்டறிந்து, அவரிடம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர்*

ஆம்பூர் அருகே ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு பணத்தை தவறவிட்ட பெண்ணை கண்டறிந்து, அவரிடம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர்*..;

Update: 2025-02-18 05:59 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஆட்டோவில் பெண் பயணி தவறவிட்ட 80 ஆயிரம் ரூபாய் பணத்தை, ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு பணத்தை தவறவிட்ட பெண்ணை கண்டறிந்து, அவரிடம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஒட்டுநர்*.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த கன்னடிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் மணவாளன் ஆட்டோ ஓட்டுநரான இவர், இன்று ஆட்டோவில் பயணிகளை ஏற்றுக்கொண்டு ஆம்பூர் நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, சான்றோர்குப்பம் பகுதியில் ஆட்டோவில் ஏறிய பெண் பயணி ஒருவர், ஆம்பூர் புறவழிச்சாலையில் இறங்கிய போது, தனது 80 ஆயிரம் ரூபாய் இருந்த பணப்பையை ஆட்டோவில் தவறுதலாக வைத்துவிட்டு சென்றுள்ளார், அதனை தொடர்ந்து சிறிது நேரத்திற்கு பிறகு ஆட்டோ பணப்பை இருப்பதை கண்ட ஆட்டோ ஓட்டுநர் மணவளான், ஒரு மணி நேர தேடுதலுக்கு பிறகு ஆட்டோவில் பணத்தை தவறவிட்ட பெண்ணை சக ஆட்டோ ஓட்டுநர்கள் மூலம் கண்டறிந்து, அவரிடம் அவரது 80 ஆயிரம் ரூபாய் பணப்பையை பத்திரமாக ஒப்படைத்தனர்.. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்..

Similar News