திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மாதிரி ஆய்வில், 80 -வது சுற்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.
திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கான தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தேசிய மாதிரி ஆய்வில், 80 -வது சுற்றுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தகவல்.;
மாநில அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலர்களால் 80வது தேசிய மாதிரி ஆய்வு (ஜனவரி 2025 முதல் ஜூன் 2026) முடிய, முழுமையான சுகாதார ஆய்வு (ஜனவரி 2025 முதல் டிசம்பர் 2025 வரை), உள்நாட்டுச் சுற்றுலா செலவு கணக்கெடுப்பு (ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை) மற்றும் தேசிய அளவில் குடும்பப் பயண ஆய்வு (ஜூலை 2025 முதல் ஜூன் 2026 வரை) ஆகிய தலைப்புகளில் சமூக பொருளாதார ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாய்வு சுகாதாரத் துறை குறித்த அடிப்படை அளவு தகவல்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு மேற்கொள்ளபட உள்ளது. பல்வேறு வயதினரிடையே ஏற்படும் நோய்களுக்காக மருத்துவமனையில் (உள்நோயாளி, வெளிநோயாளி) மேற்கொள்ளும் சிகிச்சை, மகப்பேறு மற்றும் குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆகியவற்றில் கீழ் மேற்கொள்ளும் செலவினங்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது. மேலும், தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை பிறப்பு விகிதம் ஆகியவை இந்த கணக்கெடுப்பு தரவுகளிலிருந்து பெறப்பட உள்ளது. ‘பாக்கெட்டில் இருந்து செலவழிக்கப்படும்” மற்றும் அரசு நிதியளிக்கும் சுகாதார காப்பீட்டுத் திட்டங்களை அணுகுவதில் மக்களின் விழிப்புணர்வு பற்றியும் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் குறிப்பாக சிறுகுளம், வடகரை, திருச்சுழி, செட்டிகுறிச்சி, திப்பம்பட்டி, விஜயகரிசல்குளம், கல்லுமடம், சிங்கநாதபுரம், சூரங்குடி மற்றும் பச்சகுளம் ஆகிய 10 கிராமப்புற மாதிரிகளிலும்;, இராஜபாளைம்(2), பள்ளபட்டி, திருத்தங்கல், கூரைக்குண்டு, பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை(2), சத்திரபட்டி, சேத்தூர், விருதுநகர் மற்றும் தளவாய்புரம் ஆகிய 12 நகர்ப்புற மாதிரிகளிலும்; இக்கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மேற்படி, ஆய்வுக்காக பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்ந்த அலுவலர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் விவரங்களை சேகரிப்பதற்காக வரும் பொழுது பொதுமக்கள் உண்மையான புள்ளி விவரம் அளித்து, நாட்டின் வளர்ச்சிக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்களால் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் மிகவும் இரகசியமாக பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.